1.தமிழ் வளர்ச்சி துறையில் - 2023-2024 ஆம் கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் - கல்லூரி மாணாக்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 07. 07.2023 ஆம் நாளன்று அரசர் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் நடைபெற்றதில் நமது கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் ஜே. அண்ட்ரு காட்வின் (IYear-CSE) கட்டுரை போட்டியிலும், த. பாலமுருகன் (IYear-EEE) பேச்சுப்போட்டியிலும். லி. ஹரிவர்த்தினி (IYear-Mech) கவிதைப்போட்டியிலும் கலந்துக்கொண்டு சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
2. தமிழ் வளர்ச்சி துறை - 2023-2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் - Rotaract club of NIFTEM-T & Rotary club of Thanjavur Kings இணைந்து நடத்தும் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி 13/09/2023 ஆம் நாளன்று தேசிய உணவுத் தொழில் நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) தஞ்சாவூரில் நடைபெற்றதில், நமது கல்லூரி மாணவர்கள் சி.சொர்ணலெட்சுமி (III Yr-CIVIL) மற்றும் கா. ஹரிணி (III Yr-EEE) கலந்துக்கொண்டு சான்றிதழ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
3.தமிழ் வளர்ச்சி துறை - நமது கல்லூரி மாணவர் தமிழ் மன்றம் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் மாணவர்களுக்கிடையே நடைபெற்றதில் முதல் பரிசு தலா ரூ. 5000, இரண்டாம் பரிசு தலா ரூ. 3000, மூன்றாம் பரிசு தலா ரூ . 2000 வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசை பெற்ற மாணவர்களின் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
4. மாணவர் தமிழ் மன்றம் சார்பாக வைக்கம் போராட்டம் நூற்றாண்டு கொண்டாட்டம் நிகழ்வாக "வைக்கம் சத்தியாகிரகம் " என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி - இணைப்பேராசிரியர்,முனைவர்,வி. பாரி அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
5. கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி மாணவர்கள் தமிழ் மன்றம் சார்பாக 28-11-2023 நடைபெற்றது. அதில் முதல் பரிசு கா. ஹரிணி (மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை), இரண்டாம் பரிசு அ.ஹரிப்பிரியா (முதலாமாண்டு இயந்திரவியல் துறை) மூன்றாம் பரிசு லி. ஹரிவர்த்தினி (இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் துறை) வெற்றி பெற்றார்கள்.